2-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்

கடையம் அருகே 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-07-28 16:18 GMT

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஏ.பி.நாடானூரில் அந்த பகுதியை சேர்ந்த 9 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு அரசு கொடுத்த நிலத்தில் 2 பேர் நிலங்கள் தவிர மற்ற இடங்களை சிலர் போலி பட்டா, பத்திரம் தயார் செய்து கிரையம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியினர் ஏற்கனவே போராட்டம் நடத்தி, விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்த நிலத்தில் வேலி அமைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினர் அம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் காலை முதல் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வருவாய் துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் தோல்வி ஏற்பட்டதால் இரவிலும் கோவில் அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக போராட்டம் ெதாடர்ந்தது. வேலியை அகற்றாவிடில் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு அருகில் உள்ள சுடுகாட்டில் குடியேற போவதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்