கோவில்பட்டியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-27 15:09 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு எட்டயபுரம் தாலுகா மேலநம்பியாபுரம் கிராம மக்கள், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரெ.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள அருந்ததியர் மக்களின் பொதுநடைபாதையை மீட்டு தரக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்