மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் - போலீசார் பேச்சுவார்த்தை

தேன்கனிகோட்டை அருகே மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-15 10:45 GMT

தேன்கனிகோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள நாட்ராம்பாளையம் கிராமத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக தொடர் மின்வெட்டு இருந்து வருவதாக கூறப்படுகிறது. மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் கடும் அவதிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து இன்று நாட்ராம்பாளையம் பகுதியில் கிராம மக்கள் சாலையின் நடுவே கற்களை வைத்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. மேலும் அவ்வழியாக சென்ற பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அஞ்செட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்