வனப்பகுதியில் தைல மரக்கன்றுகளை நட கிராம மக்கள் எதிர்ப்பு

ஆண்டிமடம் அருகே வனப்பகுதியில் தைல மரக்கன்றுகளை நட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.;

Update: 2022-11-19 18:55 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலுவைச்சேரி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் தைல மரக்கன்றுகள் நடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதையறிந்த சிலுவைச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தைல மரக்கன்றுகள் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மரக்கன்று நடும் பணியை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்