மின் மயானம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

செக்கானூரணியில் மின் மயானம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2023-07-13 19:30 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செக்கானூரணியில், தேங்கல்பட்டி கிராமத்திற்கு சொந்தமான மயானம் உள்ளது. செக்கானூரணி, தேங்கல்பட்டி கிராம மக்கள் இறந்தால் இந்த மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். சமீபத்தில் செக்கானூரணி பகுதிக்கு மின் மயானம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கு செக்கானூரணி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த சமரச பேச்சுவார்த்தை திருமங்கலம் தாசில்தார் சிவராமன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கிராம மக்கள் மின் மயானம் வந்தால் பழமையான வழக்கங்கள் மறைந்து போகும். எனவே மின் மயானம் வேண்டாம் என தெரிவித்தனர். இதற்கு தாசில்தார் சிவராமன், இதை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகன், சிவ பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் நர்மதா கபிகாசி மாயன் உள்பட கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்