கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கோட்டை அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-04-10 19:00 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள சென்னஞ்செட்டிபட்டியில், அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை இணைப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணம்மாளை சந்தித்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர். இதனை பெற்று கொண்ட தலைமை ஆசிரியர், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்