கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

களக்காட்டில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-21 19:05 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் கரடி வேட்டை நடந்ததாக வனத்துறையினர் தோட்ட காவலாளியை கைது செய்தனர். மேலும் 20 பேரை தேடி வருவதாக தெரிவித்தனர். இந்த நிலையில், பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி வனத்துறை அதிகாரியை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், வனவிலங்குகள் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கீழவடகரை கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் லட்சுமணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார், ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் முத்துவேல், ஒன்றிய துணை செயலாளர் லெனின் முருகானந்தம், பொருளாளர் அயூப்கான், விடுதலை சிறுத்தைகள் கட்சி சுந்தர் மற்றும் பெண்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் கீழவடகரை கிராம வனக்குழு பெற்ற சிறந்த வனக்குழுவுக்கான விருதுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்