மின்சாரம் தாக்கி இறந்த காட்டு யானைக்கு 11-ம் நாள் சடங்கு செய்த கிராம மக்கள்

மின்சாரம் தாக்கி இறந்த காட்டு யானைக்கு 11-ம் நாள் சடங்கை கிராம மக்கள் செய்தனர்.;

Update:2022-05-22 22:25 IST

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த நல்லாம்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் நுழைந்த 40 வயது மதிக்கத்தக்க மக்னா காட்டு யானை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் கிராம பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து உயிர் இழந்த யானைக்கு 11-வது நாள் காரியமாக சடங்குகளை செய்தனர். இறந்த யானை புதைக்கப்பட்ட குழியின் மீது பூக்கள் அலங்கரிக்கப்பட்டு, யானையின் விருப்பமான உணவாகிய வாழை, கரும்பு உள்ளிட்டவைகளை படையலிட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்