கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி

சிங்கம்புணரியில் இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்

Update: 2023-10-06 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட மேலையூர் ஊராட்சியில் அய்யாபட்டி கிராமத்தில் 18-ம் படி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட காளை பல இடங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டுகளுக்கு சென்று வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது.. இந்நிலையில் கோவில் காளை திடீரென்று உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தது. இதை தொடர்ந்து கிராமத்தார்கள் ஒன்றிணைந்து கோவில் காளைக்கு மாலை, பட்டு வேட்டிகள் போர்த்தி அஞ்சலி செலுத்தினா். அதனை தொடர்ந்து இறந்த காளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்