மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள குன்னாரம்பட்டியில் உள்ள ராஜநேரி கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்த கிராம மக்களை படத்தில் காணலாம். சிறிய மூங்கில் குச்சிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஊத்தா எனப்படும் கூடையை மீன்பிடி சாதனமாக பயன்படுத்தி கிராம மக்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர்.