திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் பஸ் நிற்காமல் செல்வதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் நிறுத்தத்தில் பஸ் நிற்க வேண்டும் எனக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-01 20:21 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் நிறுத்தத்தில் பஸ் நிற்க வேண்டும் எனக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பஸ்களை நிறுத்தவில்லை

திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில் தென் மாவட்டங்கள் வழியாக செல்லும் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களாக அரசு பஸ்கள் சிவரக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லவில்லை. இந்நிலையில் திருமங்கலத்தில் இருந்து சிவரக்கோட்டை வழியாக சென்ற அரசு பஸ்சில் சிவரக்கோட்டை பொதுமக்கள் சிலர் ஏறி உள்ளனர். அவர்களை சிவரக்கோட்டையில் நிறுத்தாமல் 2 கிலோமீட்டர் தூரம் தள்ளி இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த சிவரக்கோட்டை கிராம மக்கள் மாட்டுத்தாவணியில் இருந்து கோவில்பட்டி சென்ற அரசு பஸ் சிவக்கோட்டையில் நிற்கவில்லை என்பதால் கோவில்பட்டி சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்த பஸ்சை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, தற்போது கட்டணமில்லாமல் செல்லும் அரசு பஸ்சில் ஏறினால் தங்களை மதிப்பதில்லை. மரியாதை குறைவாக பேசுகின்றனர். சிவரக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பது இல்லை. இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்