புவனகிரி அருகே மரம் சாய்ந்து விழுந்து மின்சாரம் துண்டிப்பு:மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

புவனகிரி அருகே மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-11 18:45 GMT


புவனகிரி,

புவனகிரி அருகே உள்ளது ஆதிவராக நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் சம்பவத்தன்று இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் மரம் ஒன்று, அங்குள்ள மின்கம்பத்தின் மீது விழுந்ததால், அப்பகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. மழை நின்று வெகு நேரமாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

மின்வாரிய அதிகாரிகளிடம் கிராம மக்கள் செல்போனில் பேசிய போதிலும், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அப்பகுதியில் கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தொிவித்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து நேற்று முன்தினம் காலை முதல் அப்பகுதி முழுவதும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்