குப்பைகளை அகற்ற கோரி கிராம மக்கள் சாலை மறியல்

குப்பைகளை அகற்ற கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-31 19:57 GMT

பெட்டவாய்த்தலை ஊராட்சிக்கு உட்பட்ட மேல ஆரியம்பட்டிக்கு தேவதானம் வழியாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையோரங்களில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற கோரி மேல ஆரியம்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி மன்ற அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆண்டியப்பன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலஆரியம்பட்டி சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்