நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட வீட்டை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட வீட்டை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-02-27 18:45 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே வக்காரமாரி கிராமத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் ஒருவர் வீடு கட்டி வசித்து வருகிறார். அந்த இடத்தில் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கிராம மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட வீட்டை அகற்றக்கோரியும், குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் வக்காரமாரி கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, தாசில்தார் செல்வகுமார், நகராட்சி பொறியாளர் மகாராஜன், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தனி நபரின் வீட்டை நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்