பரவாக்கோட்டையில் கிராம மக்கள் சாலைமறியல்

பரவாக்கோட்டையில் கிராம மக்கள் சாலைமறியல்

Update: 2023-03-17 18:45 GMT

பரவாக்கோட்டையில் கிராம மக்கள் சாலைமறியல் நடந்தது. இதனால் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் தற்காலிக கட்டிடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. நிரந்தர கட்டிடம் கட்டுவதற்காக ரூ.81 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 3 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் பாதை அமைந்துள்ள நிலப்பகுதி தனியார் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு செல்ல பாதை அமைப்பதற்கு நில உரிமையாளர் தர மறுத்ததால் அந்த நிலத்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு செல்ல பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பரவாக்கோட்டை கிராம மக்கள் நேற்று மன்னார்குடி-பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்ததும் மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ, மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வார காலத்தில் அந்த நிலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கு பாதை ஏற்படுத்தி தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் மன்னார்குடி மதுக்கூர் வழி பட்டுக்கோட்டை சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்