அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் போராட்டம்

கோவில்பட்டியில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-22 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இலுப்பையூரணி பஞ்சாயத்து கூசாலிப்பட்டி, வண்ணார்பேட்டை பகுதி மக்கள் பாலமுருகன் என்பவர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் உதவி கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூசாலிப்பட்டி, வண்ணார்பேட்டை பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி இல்லை. மேலும் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 குடிநீர் தொட்டிகள் மட்டுமே உள்ளன. அதன்மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே பஞ்சாயத்து நிர்வாகம் கூசாலிப்பட்டி, வண்ணார்பேட்டை பகுதிகளுக்கு மக்கள்தொகையின் அடிப்படையில் கூடுதல் தண்ணீர் வசதி மற்றும் சாலை, தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தித்தர உத்தரவிட வேண்டுகிறோம்' என கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்