செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்
அகனி ஊராட்சியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம் நடந்தது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகனி ஊராட்சி நந்திய நல்லூர் பசுபதிசுவரர் சிவன் கோவில் அருகில் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் நேற்று செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.