கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
வலங்கைமானில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வலங்கைமான்;
வலங்கைமானில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோாிக்கைகள்
ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி ஓய்வூதியம் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி பணப்பயனுடன் கூடிய 3 கட்ட பதவி உயர்வு, 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த ஜி.டி.எஸ். ஊழியர்களின் வாரிசுகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்்கைகளை வலியுறுத்தி கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பணிகள் பாதிப்பு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கிராம அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று நடந்த போராட்டத்தால் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த கிராம புற அஞ்சலக ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் கிராமப்புற அஞ்சல் பணிகள் பாதிக்கப்பட்டன.