தேனி அருகே பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி 2-வது நாளாக மக்கள் போராட்டம்

தேனி அருகே பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி 2-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-09-20 17:43 GMT

தேனி அருகே வடபுதுப்பட்டியில் பஞ்சமி நிலம் என்று கூறப்படும் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி, வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று அப்பகுதியில் ஏராளமான மக்கள் குடிசைகள் அமைத்து குடியேறும் போராட்டம் நடத்தினர். இதில் ஜெய்பீம் புரட்சிப்புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் அருந்தமிழரசு மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்றனர். வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், இரவில் அங்கேயே மக்கள் தங்கினர். பெண்களை வீடுகளுக்கு அனுப்பி விட்டு, ஆண்கள் சிலர் மட்டும் அங்கேயே தங்கினர்.

இந்தநிலையில் இன்று 2-வது நாளாக அவர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். குடிசைகள் அமைத்த பகுதியிலேயே சமையல் செய்து சாப்பிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், "முதல் நாளில் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை. 2-வது நாள் மாலை வரை பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. எங்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தை தொடர்வோம்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்