11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.;
அரியலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2022-23-ம் ஆண்டிற்கான சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு முதல் கட்டமாக அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டத்தில் விளந்தை மற்றும் பெரியாத்துக்குறிச்சி, உடையார்பாளையம் வட்டத்தில் பிள்ளைப்பாளையம், தாதம்பேட்டை, தென்கச்சிபெருமாள்நத்தம், காரைக்குறிச்சி, சோழமாதேவி, தென்னவநல்லூர் மற்றும் ஸ்ரீபுரந்தான், அரியலூர் வட்டத்தில் ஏலாக்குறிச்சி மற்றும் திருமழபாடி என மொத்தம் 11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. எனவே அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.