கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணியின்போது இறந்து போன பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மாவட்ட தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம ஊராட்சி களப் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வெற்றிசெல்வன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொட்டும் மழையிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.