கொரடாச்சேரி பகுதியில் கிராம சபை கூட்டம்

கொரடாச்சேரி பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2022-10-02 18:45 GMT

கொரடாச்சேரி ஒன்றியம் மணக்கால் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் கலந்து கொண்டார். கூட்டத்தில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நிகழ்வு, எண்ணும் எழுத்தும், போட்டி தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்துதல் குறித்தும் பள்ளி மேலாண்மை குழு தீர்மானங்கள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கமலாம்பாள் ராஜகோபால், துணைத் தலைவர் திவ்யா சந்துரு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி மேல்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கொரடாச்சேரி ஒன்றியத்தில் வண்டாம்பாளை, மேலராதாநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. கொரடாச்சேரி ஒன்றியம் முசிரியத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஒன்றியக் குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒன்றியம் முழுவதும் 44 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்