கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்க கூட்டம்

நீடாமங்கலம் ஒன்றிய கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்க கூட்டம்

Update: 2023-06-16 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ஒன்றிய கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நீடாமங்கலம் நகர செயலாளர் பாரதி மோகன், கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சாந்தகுமார், ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய துணைத்தலைவர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:- கிராம உள்ளாட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார் இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு பல மாதங்கள் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் பல வகையான நிலுவை தொகைகளும் பெரும் தொகையாக உள்ளது. எனவே சம்பளம் வழங்கக்கோரி ஊழியர்கள் ஒன்று திரண்டு தொழிலாளர் துறைக்கு அஞ்சல் மூலமாகவும் மற்றும் நீடாமங்கலம் போலீசாருக்கு, நீடாமங்கலம் அண்ணா சிலையிலிருந்து ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு போலீஸ் துறையிடம் அடுத்த மாதம்(ஜூலை) 5-ந்தேதி மனு கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்