கிராம உதவியாளர் சங்க கூட்டம்
கோவில்பட்டியில் கிராம உதவியாளர் சங்க கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணியர் விடுதியில் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர். செல்லப் பாண்டியன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சங்கரநாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டத்தலைவர்்கள் சரவணன், நல்லசாமி, எட்டையாபுரம் வட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கயத்தாறு வட்டார செயலாளர் ராஜா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாநில இணைச்செயலாளர் எஸ்.அய்யப்பன் மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் பதவி உயர்வு என்பதை, 6 ஆண்டுகளாக குறைத்து தமிழக அரசு ஆணை பிறபிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்ட செயலாளர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.