மோட்டார் சைக்கிள் மோதி கிராம உதவியாளர் பலி

திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கிராம உதவியாளர் பலி

Update: 2023-08-12 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(வயது 50). கரடிப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி புரிந்து வந்த இவர், சம்பவத்தன்று அவரது உறவினர் ரவிச்சந்திரன்(49) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அரசூர் கூட்டுரோடு தேசியநெடுஞ்சாலையை கடந்து தென்மங்கலத்துக்கு செல்வதற்காக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தபோது விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் ஜெயச்சந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்