விராலிமலை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்

விராலிமலை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-02 19:02 GMT

விராலிமலை ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சக்தி சரணம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு குன்னத்தூரில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு திட்ட பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல விராலிமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்