கண்ணமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

கண்ணமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-15 18:49 GMT

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் கிராம ஊராட்சியில் இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் குழுவின் தலைவரும் நீதிபதியுமான ஹரி ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி கண்ணமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்வில் போக்சோ சட்டம், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்து வக்கீல் பாண்டியன் விளக்கி பேசினார். மேலும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முகாமில் வி.ஏ.ஓ. பூரணபொற்கமலி, சுகாதாரத்துறை பரமேசுவரி, அங்கன்வாடி பணியாளர்கள் மச்ச ராணி, இந்திரா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர், கிராம உதவியாளர் கணேசன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் இளவரசன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்