காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது.

Update: 2022-08-16 09:03 GMT

காஞ்சீபுரம் அடுத்த வாரணவாசி ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5 அடி உயர வெண்கல சிலை வாரணவாசி ஊராட்சியில் நிறுவ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் முன்னாள் மாவட்ட வருவாய் துறை அதிகாரி க.மோகனசுந்தரம், தொழில்-அதிபர்கள் வினோத்குமார், பிருத்திவிராஜ், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி செவ்வராஜ், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் டி.தமிழ்அமுதன் தலைமையில் நடைபெற்றது.

வாலாஜாபாத் ஒன்றியம் அயிமிஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கோவளவேடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு கிராம சபை கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டு கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சுமதி, காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்திவாக்கம் ஊராட்சியில் குமார், சின்னிவாக்கம் ஊராட்சியில் ஜெனிபர் மார்கிரேட், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் சுரேஷ், வையாவூர் ஊராட்சியில் ஜெயலட்சுமி நீலகண்டன், ஊத்துக்காடு ஊராட்சியில் சாவித்திரி மணிகண்டன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு ஊராட்சி வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.

படப்பை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் தலைமையிலும், மணிமங்கலம் ஊராட்சியில் அய்யப்பன் தலைமையிலும், மாடம்பாக்கம் ஊராட்சியில் வெங்கடேசன் தலைமையிலும், காவனூர் ஊராட்சியில் உமா மகேஸ்வரி வெங்கடேசன் தலைமையிலும், வடக்குப்பட்டு ஊராட்சியில் நந்தினி மேத்தா வசந்தகுமார் தலைமையிலும், அமரம்பேடு ஊராட்சியில் பொன் ரமேஷ் தலைமையிலும், வளையக்கரணை ஊராட்சியில் ராஜா என்கிற ராஜன் தலைமையிலும், ஒரத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சுந்தர் தலைமையிலும், சென்னகுப்பம் ஊராட்சியில் பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எறையூர் ஊராட்சியில் சசிரேகா சரவணன் தலைமையிலும், வல்லம் ஊராட்சியில் விமலாதேவிதர்மா தலைமையிலும், பண்ருட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் தலைமையிலும் வல்லக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை தசரதன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

உத்திரமேரூர் அடுத்த மருத்துவான்பாடி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் வீரம்மாள் மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதாஞானசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள அமரம்பேடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ரமேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரசுராமன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு 400 பேருக்கு மழை கோட் அனைத்து வீடுகளுக்கும் மஞ்சள் பை மற்றும் ஊராட்சிக்கு பேட்டரி குப்பை வண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்