சின்னாரம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சின்னாரம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சப்-கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2022-10-02 18:12 GMT

காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம் சின்னாரம்பட்டி ஊராட்சி காரகாரன் வட்டம் பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் எம்.சண்முகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.துரை முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சப்-கலெக்டர் லட்சுமி, கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சின்னாரம்பட்டி பகுதியில் ஆயிரம் தென்னை மரங்கள் நடுவது எனவும், மேட்டுப் பகுதியான காரகாரன் வட்ட பகுதிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.பிரபாவதி, ஒன்றிய கவுன்சிலர் தாமோதரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவிகா முருகன், கிராம நிர்வாக அலுவலர் முருகன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஹேமலதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்