மானாமதுரை
மானாமதுரை மாங்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பார்வையாளராக அருணா பங்கேற்றார். வரவு செலவு கணக்குகளை ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் வாசித்தார். அரசின் நலத்திட்டங்கள் பற்றி கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதேபோல் மானாமதுரை அருகே உள்ள விளத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வாலகுருநாதன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பார்வையாளராக வட்டார வளர்ச்சி அதிகாரி சங்கர பரமேஸ்வரி, தாசில்தார் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை குறித்தும் விவாதித்தனர்.