ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட பாசார் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அனுஜாபழனி சுப்பிரமணியன் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் அமிர்தம் தணிகைமலை ஆகியோர் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் சுய உதவி குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூசுகல்லுமேடு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைப்பது உள்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கல்வி குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.