கிராம சபை கூட்டம்
ஆலங்குளம் அருகே கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஆகாஷ் பங்கேற்றார்
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருவந்தா கிராம ஊராட்சி சோலைசேரி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தானியல் தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலந்து கொண்டார். ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஊராட்சி செயலாளர் முருகேசன் வரவு-செலவு கணக்குகளை வாசித்தார்.
கருவந்தா முதல் சோலைச்சேரி இணைப்பு சாலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க நிர்வாக அனுமதிக்கு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டது. சோலைச்சேரி முதல் புதூர் வரை இணைப்பு சாலை, சோலைசேரி பெரிய குளத்தில் தடுப்பு சுவர் அமைத்தல் ஆகிய இரண்டு பணிகளையும் தல ஆய்வு செய்து உதவி பொறியாளர் மதிப்பீடு சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கிராமசபை கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பிரான்சிஸ் மகாராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.