கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரக்கோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-07 18:45 GMT

அரக்கோணம்

அரக்கோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் வேலை செய்யும் 2 கிராம நிர்வாக அலுவலர்களை அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

தகுந்த காரணமில்லாமல் பணியிட மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமையில் அரக்கோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கலெக்டர் பாத்திமா பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், துணைத்தலைவர் லட்சுமிநாராயணன், வட்ட தலைவர் ராஜேஷ், நிர்வாகிகள் கார்த்திக் உள்பட அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்