கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
தக்கலை:
கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்மிடாலம் 'ஏ' கிராமத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் ராஜேஷ். இவர் சூழல் கிராமத்திற்கு கடந்த மாதம் 27-ந்தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பணியிடமாற்றம் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஏராளமானோர் நேற்று மாலை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அலுவலக வராண்டாவில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார். போராட்டமானது மாலை 5.45 மணிக்கு தொடங்கி இரவு 7.45 மணி வரை நடந்தது. போராட்டத்தில் குமரி மாவட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.