பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-02 19:40 GMT

பலாத்காரம் செய்ய முயற்சி

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாயம் வடக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் அன்புராஜ் (வயது 36). இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று அன்புராஜ் ஒரு பெண்ணின் வீட்டின் பின்புற வாசல் வழியாக அத்துமீறி உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து அவரை திட்டி அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து சம்பவம் நடந்த அடுத்த நாள் அந்த பெண் கடைக்கு சென்றார். அப்போது, அந்தப் பெண்ணை வழிமறித்து இது தொடர்பாக புகார் ஏதும் கொடுத்தால் உன்னையும், உனது கணவரையும் அடியாட்கள் வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டினாராம்.

கைது

இது தொடர்பாக அந்த பெண் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் குளித்தலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்