இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்

பெரிய கொழப்பலூரில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

Update: 2022-12-11 13:04 GMT

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு தாலுகா பெரியகொழப்பலூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் தற்போது பழுதடைந்து, கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ள மேற்கூரை சிமெண்டு பூச்சு விழுந்துவிட்டது.

தற்போது இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால் இங்கு வேலை செய்பவர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வரும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

மேலும் கிராம நிர்வாக அலுவலரின் பதிவேடுகள் வருவாய்த்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டு வருகிறது.

எனவே, பொதுப்பணி துறையினர் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை உடனே அகற்றிவிட்டு வேறு கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்