இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்
குத்தாலம் அருகே எலந்தங்குடி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே எலந்தங்குடி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடிந்து விழும் நிலையில்...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் வழுவூர் ஊராட்சி எலந்தங்குடி கிராமத்தில் திருநாள்கொண்டச்சேரி கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு முன்பு கட்டப்பட்டது என கூறப்படுகிறது.
தற்போது இந்த கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், கட்டிடத்தின் மேற் கூரையின் உள்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. மேலும் இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அலுவலகப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக அருகாமையில் உள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
புதிய கட்டிடம்
இந்த அலுவலகத்திற்கு பட்டா, சிட்டா, அடங்கள் உள்ளிட்ட அன்றாட அலுவல் பணிகளுக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றர்.
எனவே கட்டிடம் இடிந்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதற்கு முன்பு இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.