பனைக்குளம்,
ராமநாதபுரம் அருகே உள்ள சுப்புத்தேவன் வலசை மேற்கு தெருவில் அமைந்துள்ள சக்தி முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டி பக்தர்கள் முளைப்பாரி வளர்க்க தொடங்கினர். ஒருவார காலம் கும்மிப் பாட்டு, ஒயிலாட்டம் என திருவிழா களை கட்டியது. கரகம் எடுத்து பூசாரி பயபக்தியுடன் கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். புதன்கிழமை முளைப்பாரியுடன் கரகம் ஊர்வலமாக சென்று அய்யனார் கோவில் ஊருணியில் கரைக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.