விநாயகர் சதுர்த்தி விழா கலந்தாய்வு கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-08-28 17:52 GMT

தேவகோட்டை, 

வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தேவகோட்டை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தேவகோட்டை நகர, வட்டார பா.ஜ.க.வினருடன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, அனுமதி இன்றி விநாயகர் சிலை வைக்கக்கூடாது, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்கவும், போலீசார் அனுமதியுடன் ஊர்வலம் நடத்தவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்