எஸ்.புதூர்,
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளான முசுண்டப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் அடைக்கலசாமி, கே.நெடுவயலில் தலைவர் சரவணன், மேலவண்ணாரிருப்பில் தலைவர் ஜோதி பித்திரை செல்வம், கிழவயலில் அருண்பிரசாத், கரிசல்பட்டியில் ஷாஜகான், வாராப்பூரில் மலர்விழி நாகராஜன், செட்டிகுறிச்சி ஊராட்சியில் ஜெயமணி சங்கர், புழுதிபட்டியில் தலைவர் லெட்சுமி சண்முகம், பிரான்பட்டியில் ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி வெள்ளைச்சாமி ஆகியோர் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர். கரிசல்பட்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் செயலாளர் உபைசுல் கருணை கொடியேற்றி 100 மரக்கன்றுகளை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.