வைகாசி விசாகத்தையொட்டி சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சங்காபிஷேகம்

வைகாசி விசாகத்தையொட்டி சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-12 18:40 GMT

கபிஸ்தலம்:-

வைகாசி விசாகத்தையொட்டி சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் ஆறுபடைவீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு நேற்று வைகாசி விசாகத்தையொட்டி கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டு, சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணி அளவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

பாதுகாப்பு

மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் ே்பாலீசார் செய்து இருந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சுவாமிமலை பேரூராட்சி மன்றம் சார்பில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், துணைத்தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

திருப்புறம்பியம்

மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை சமேத சாட்சிநாத சுவாமி கோவிலில் திவ்யபரிமளவள்ளி, தெய்வானை சமேத புறம்பய முருகனுக்கு, வைகாசி விசாகத்தை முன்னிட்டு அபிஷேகம் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் மண்ணியாற்று பூசை படித்துறையில் இருந்து காவடி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை புறம்பயநாத கான சபா மற்றும் வணிகர் நாடக சபையினர் செய்திருந்தனர்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருமஞ்சன வீதி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்களால் பால்குடம், காவடி எடுத்து வரப்பட்டு முருக பெருமானுக்கு அபிசேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு வாணவெடிகள் முழங்க சுவாமி மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்