ராஜீவ் வழக்கில் 6 பேருக்கு கிடைத்த தீர்ப்பு தாமதமானாலும் அவர்களின் விடுதலை வரவேற்கத்தக்கது - விஜயகாந்த்

ராஜீவ் வழக்கில் 6 பேருக்கு கிடைத்த தீர்ப்பு தாமதமானாலும் அவர்களின் விடுதலை வரவேற்கத்தக்கது என விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2022-11-11 10:48 GMT

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி இருந்தேன்.

பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை கடந்த மே மாதம் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

பேரறிவாளனை தொடர்ந்து தற்போது நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் உச்சநீதிமன்றம் இன்று (11.11.2022) விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உட்பட 6 பேருக்கு கிடைத்த தீர்ப்பு தாமதமானாலும் அவர்களின் விடுதலை வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்