மழை நீரை விரைவாக அகற்றிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் பாராட்டு

துரித நடவடிக்கை மேற்கொண்ட முதல் அமைச்சர் மற்றும், தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-11-03 14:07 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னையில் தேங்கிய மழைநீரை விரைந்து அகற்றியதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவில், எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை விரைந்து ராட்சத இயந்திரங்கள் கொண்டு அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

துரிதமாக இந்த நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும், தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், குறிப்பிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்