தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை கோடை வெயில் கொளுத்தியது. நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.