வீடூர் அணை ஷட்டர் பராமரிப்பு
உபரி நீரை வெளியேற்ற வீடூர் அணை ஷட்டர் பராமரிக்கப்பட்டது.;
விக்கிரவாண்டி:
வீடூர் அணையின் மொத்த நீர்மட்டம் 32 அடியாகும். தற்போது அணையில் 30.725 அடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 181 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர்மட்டம் இன்று(சனிக்கிழமை) 31 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இங்கிருந்து உபரி நீரை வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா தலைமையில் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் உதவி பொறியாளர்கள் பாபு, மோகன்ராம் மற்றும் ஊழியர்கள் நேற்று அணையின் ஷட்டரில் பராமரிப்பு பணி மேற்கொண்டனர்.