பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி முகாமில் தங்க வைப்பு

வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.;

Update: 2022-11-13 17:19 GMT

அரக்கோணத்தை அடுத்த நந்திவேடந்தாங்கல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் தாழ்வாக இருந்த குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இது பற்றி தகவல் அறிந்த அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பாதிக்கப்பட்ட 5 வீடுகளில் வடசித்தவர்களை மீட்டு கெடாரிகுப்பம் நடு நிலைப்பள்ளி முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கினார். அப்போது வருவாய் ஆய்வாளர் குழந்தை தெரேசா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்