மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த விவசாயி வெட்டிக்ெகாலை
மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த விவசாயி வெட்டிக்ெகாலை
கீழ்வேளூர் அருகே மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த விவசாயி வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 5 ேபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை அடித்துக்கொன்றார்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சி கடம்பங்குடி அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலு(வயது 50) விவசாயி. இவருக்கு 4 மகள்கள். இவர்களில் 2 மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது மனைவி முத்துலட்சுமி மீது கோபத்தில் இருந்து வந்த சிங்காரவேல், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி இரவு மனைவி முத்துலட்சுமியை மூங்கில் கட்டையால் தாக்கி கொலை செய்தார்.
ஜாமீனில் வந்தார்
இந்த கொலை தொடர்பாக போலீசார் சிங்காரவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிங்காரவேல் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியில் வந்தார். நேற்று காலை கடம்பங்குடி மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் சிங்காரவேல் டீ குடித்துவிட்டு இயற்கை உபாதையை கழிப்பதற்காக கீழ்வேளூர்-ஒர்குடி சாலையில் உள்ள சித்தாறு வடிகால் ஆற்றுப்பாலம் அருகே மறைவான பகுதிக்கு சென்றுள்ளார்.
வெட்டிக்கொலை
அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிங்காரவேலுவின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சிங்காரவேலு ரத்த வெள்ளத்தில் பலியானர்.
அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து இதுகுறித்து கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிங்காரவேலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
5 பேரை பிடித்து விசாரணை
இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் 'துலிப்' வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஒடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த கொலை தொடர்பாக சிங்காரவேலுவின் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் 5 பேரை கீழ்வேளூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.