முதியோர்களுக்கு வேட்டி- சேலை
விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முதியோர்களுக்கு வேட்டி- சேலை வழங்கப்பட்டது.;
தென்காசி விவசாய தொழிலாளர்கள் சங்கம் தாலுகா குழு சார்பில் அனைத்து சமுதாய முதியோர்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் விழா தென்காசியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் இசக்கிதுரை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள் வைரமுத்து, சுப்பையா, ராசையா, ராஜேந்திரன், முருகையா, கற்பகவல்லி, கிருஷ்ணன், பிச்சம்மாள், மாடசாமி, காளியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் சிங்காரவேல் நன்றி கூறினார்.