கால்நடை சிகிச்சை முகாம்
பெரும்பாலை அருகே கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.
ஏரியூர்:
பெரும்பாலை அருகே உள்ள கோம்பையில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், கால்நடை உதவி மருத்துவர் சார்லஸ், பெரும்பாலை கால்நடை உதவி மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, கட்டிகள் மற்றும் கர்ப்ப பை புண்களுக்கு சிகிச்சை, இனப்பெருக்க திறனை அதிகரித்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் ஆடு, மாடுகளுக்கு நோய் தொற்று பரவாமல் தடுப்பது குறித்து குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கால்நடைத்துறையினர், விவசாயிகள் கலந்து கொண்டனர்.