கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தரகம்பட்டி,
கடவூர் வட்டம், ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட எருதிக்கோன்பட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை ஆதனூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமா ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்தமுகாமில் கால்நடை மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, கால்நடைகளை பரிேசாதனை செய்து சினை ஊசி, குடற்புழு நீக்கம் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதில், கால்நடை மருத்துவ அலுவலர்கள், உதவியாளர்கள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.